RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, February 22, 2017

மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடதே! தூத்துக்குடியில் ஆட்டோத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி, பிப்.21- மோட்டார் வாகன தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிஐடியு தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் உயர்த்தப்பட்ட ஆர்டிஓ கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்; வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு ஆட்டோ சங்கமாவட்டத் தலைவர் பி. கொம்பையா தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் எம்.முருகன், சிஐடியுமாவட்ட இணைச் செயலாளர் எம்.ஞானதுரை ஆகியோர் உரையாற்றினர். உப்பு தொழிலாளர் சங்க செயலாளர் கே. சங்கரன். ஆட்டோசங்க நிர்வாகிகள் வேல்சாமி, சண்முகசுந்தரம், முனியசாமி, வேல்முருகன் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். http://epaper.theekkathir.org/

No comments: