RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, February 22, 2017

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வி.தொ.ச பெருந்திரள் முறையீடு திருநெல்வேலி,பிப். 21-நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும்,100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு பணி புரிய தேவையான கருவிகளை வழங்க வேண்டும்,கழிவறை கட்ட சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடுநடைபெற்றது. போராட்டத்திற்கு வி.தொ.ச மாவட்டச் செயலாளர் பாலுசாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் தி.கணபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்உ.முத்துபாண்டியன், மாவட்டச் செயலாளர் பி.வேலுமயில் ஆகியோர் பேசினர்.தொடர்ந்து பி.டி.ஓ.விடம் கோரிக்கை அடங்கிய மனுக்களை வழங்கினர்.இந்த போராட்டத்தில் சுப்பையா,கண்ணன்,சந்திரசேகரன்,செல்லதுரை ,தர்மதுரை,சங்கரி,வேலம்மாள்,புஷ்பா உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/

No comments: