RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, February 22, 2017

மே 14-க்குள் உள்ளாட்சித் தேர்தல் உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, பிப். 21 தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை மே 14 ஆம்தேதிக்குள் நடத்த வேண்டும்என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு செவ்வாயன்று (பிப். 21) மீண் டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மே 15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மே 14 ஆம் தேதிக்குள் உள் ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைமார்ச் 6 ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் நடைபெறும் என்றும் அவர் உத்தரவிட்டார்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது குற்றப் பின்னணி குறித்து முழு விவரத்தை தனி மனுவாக சமர்ப் பிக்கக் கூறும், தமிழக அரசின் பஞ்சாயத்து (தேர்தல்) சட்டம் 1995, விதி 26ல் திருத்தம் கொண்டு வரவேண்டும். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி பற்றிய விவரங் களை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் விளம்பரப் படுத்த வேண்டும். இந்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து விதிமுறைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று தனி நீதிபதி போட்ட உத்தரவை அமல்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். http://epaper.theekkathir.org/

No comments: